1 14
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

Share

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாக இவ்வாறு கிராக்கி நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு கூடுதல் கடன் பெறுகையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது இணக்கப்பாடு கடன் ஸ்திரத்தன்மை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டில்களை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும். ஜனாதிபதி அநுரகுமார பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்தக் கடன் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...