sajith team
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசை எதிர்த்து கண்டி முதல் கொழும்பு வரை சஜித் அணி பேரணி!

Share

ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

5 நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து ஆரம்பமாகி 30ஆம் திகதி கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

* முதலாம் கட்டம் – ஏப்ரல் 26 – கண்டி முதல் மாவனெல்லை வரை

* இரண்டாம் கட்டம் – ஏப்ரல் 27 – மாவனெல்லை முதல் கலிகமுவ வரை

* மூன்றாம் கட்டம் – ஏப்ரல் 28 – கலிகமுவ முதல் தனோவிட்ட வரை

* நான்காம் கட்டம் – ஏப்ரல் 29 – தனோவிட்ட முதல் யக்கல வரை

* ஐந்தாம் கட்டம் – ஏப்ரல் 30 – யக்கல முதல் பேலியகொடை வரை

மே முதலாம் திகதி கொழும்பில் மாபெரும் மே தினப் பேரணியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஹரின் பெர்னாண்டோ எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...