சுமார் 3,700 மெட்ரிக் டொன்கள் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன். எரிவாயுவை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றையதினம் நாட்டை வந்தடைந்தகப்பலிலிருந்து தரையிறக்கப்பட்ட எரிவாயுவின் மற்றுமொரு பகுதி இன்று நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.
அதன்படி, 80,000 முதல் 90,000 வரையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களுக்கு விநியோ கிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment