பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (29.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையில், பிரதான ஆசிரியர் சங்கங்கள் இணையாது என சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறும், தமது பிரச்சினைகளை அதிபர்நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுக்கு இன்று(28) கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.