24 6656e7456b84c
இலங்கைசெய்திகள்

அரிசி தட்டுப்பாடு குறித்து தகவல்

Share

அரிசி தட்டுப்பாடு குறித்து தகவல்

நாட்டிலுள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபா எனவும் அரிசி ஆலை வைத்திருக்கும் வியாபாரிகள் கீரி சம்பாவை முந்நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாக உள்ளதால், ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் அதனை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக விலைக்கு அரிசி வாங்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாததால், மொத்த விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்களில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் கடைகள் நுகர்வோர் அதிகாரசபையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் ​​கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்வது தொடர்பாக முறைப்பாடு வந்தவுடன், வணிக வளாகங்களிலும், வணிக வளாகத்தை ஒட்டிய வணிக உரிமையாளர்களின் வீடு ஆகிய இடங்களில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை செய்யப்படும் என நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...