24 665ea1bde0b44
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் கல்வி அமைச்சினால் (Ministry of Education) மாகாண அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...