நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (22) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின் விநியோகத்தில் தடையேற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளமையினால், மின்விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மின் விநியோகத் தடை 30 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment