16 1
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Share

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணம் – பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்கவின் 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என ஆளுநர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் – சென்னை (Chennai) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் (Alliance Air) விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு விமான சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...