gover
அரசியல்இலங்கைசெய்திகள்

மேலும் ஒரு ஜனாதிபதி விசேட செயலணி

Share

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இச்செயலணியின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஒளடதங்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் விடயம் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனைத் தடுப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது, போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆகியோரை அடையாளம் காண்பது, போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப் பொருளுக்கு அடிமையாகி தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்தும் அவர்களது எதிர்கால நடவடிக்கைகள், சிகிச்சைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான மையங்கள், சமூக புனர்வாழ்வு மையங்கள், நன்னடத்தை சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவதற்கும் போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான சட்டத்தை இயற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...