சுப்பர் ஈஸ்டர்ன் என்ற எண்ணெய் கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
டீசல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 10.6 மில்லியன் லீற்றர் டீசலை தரையிறக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சிடம் டீசல் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment