10 24
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்படையின் வேகத்தாக்குதல் கப்பல் கொழும்பில்

Share

இந்திய கடற்படையின் வேகத்தாக்குதல் கப்பல் கொழும்பில்

இந்திய கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி (INS Kalpeni) இன்று (19.10.2024) கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் கல்பேனி கப்பல், இந்திய கடற்படையின் கார் நிகோபார் – வகுப்பு வோட்டர்ஜெட் எப்ஏசி என்ற வேகத் தாக்குதல் கப்பலாகும். இது 2010 ஒக்டோபர் 14ஆம் திகதி தமது சேவையை ஆரம்பித்துள்ளது.

இந்த கப்பலுக்கு லட்சத்தீவுகளில் உள்ள கல்பேனி தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இது கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் முதன்மைப் பாத்திரத்துடன் கொச்சியில் செயற்பட்டு வருகிறது.

இந்த கப்பல் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்தநிலையில், இலங்கையில் இந்தக்கப்பல் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நங்கூரமிட்டிருக்கும்.

இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப கருவிகள், இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

நிரப்புதல்களை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, கப்பல் பணியாளர்கள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்வார்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...