நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்துக்கு அருகிலிருக்கும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திகொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Leave a comment