ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி

111009367 cb2438e5 ab92 40cb 8a0f c7a01d27941bddd

தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் இன்றைய தினமே தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பாடசாலை இன்று தொடக்கம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என பொது சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிபருடனும், மாணவர்களுடனும் தொடர்புகளைப் பேணியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version