பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி!
வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது.
மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
அதன்பின் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment