“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2021 ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நம்பித்தான், 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கினேன். ஆனால் புதிய அரசமைப்பு இன்னும் கொண்டுவரப்படவில்லை. நாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார். 20 இற்கு ஆதரவளித்ததால் தற்போது மனம் வருந்துகின்றேன்.
பஸில் ராஜபக்ச நாட்டு வளங்களை விற்று பிழைப்பவர். மஹிந்தவையும் அவரே கட்டுப்படுத்துகின்றார். கோட்டாபய ராஜபக்ச என்பவர் பஸிலால் இயக்கப்படும் கைப்பாவை. இந்த நாட்டை சீரழித்துவிட்டு பஸில் எப்படியும் அமெரிக்கா சென்றுவிடுவார்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment