” புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை. அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இச்சட்டத்தின் பிரகாரம் பிடியாணையின்றி ஒருவரை கைது செய்யலாம். வீட்டை சோதனையிடலாம். வாகனங்களை பறிமுதல் செய்யலாம். பொலிஸார் சீருடையின்றி போகலாம். இவ்வாறு செய்வது சரியா?
கைது செய்யப்படும் நபரை 72 மணிநேரம் தடுத்து வைக்கலாம். இந்த காலப்பகுதிக்குள்தான் எல்லாம் நடக்கும். பலவந்தமாக வாக்குமூலம் பெறப்படும். எனவே, 24 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நாம் கோருகின்றோம்.
18 மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதை ஒரு வருடமாக்கப்பட்டுள்ளது. அதனை இரு மாதங்கள்வரை குறைக்குமாறு பரிந்துரைக்கின்றோம். தீவிரவாதிகளுக்காக நாம் இந்த சலுகைகளை கோரவில்லை, நாட்டு மக்களுக்காகவே கோருகின்றோம். ஏனெனில இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு மட்டும் தாக்கம் செலுத்தப்போவதில்லை. மக்கள்மீதும் பாயும். ” – என்றார் கிரியல்ல.
எனினும், திருத்தங்களை ஏற்பதற்கு வெளிவிவகார அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். அதற்கான காரணம் தனது பதில் உரையின்போது விளக்கமாக வழங்கப்படும் என பீரிஸ் குறிப்பிட்டார்.
அதேவேளை, இறுதி இறுதியான சட்டம் அல்ல, எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் ஆளுந்தரப்பால் வழங்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment