இறக்குமதி முட்டைக்கு அனுமதி!!

EGG 1

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அது குறித்த அறிக்கை வர்த்தக அமைச்சுக்கு புதன்கிழமை (29) அனுப்பி வைக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, குறித்த முட்டை ஒன்று 35 ரூபாய் என்ற விலையில் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு  விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சந்தையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளும் கடந்த  23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போதும் அனுமதிக்கான மதிப்பீடுகள் செய்யப்படும் வரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டன.

#SriLankaNews

Exit mobile version