19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி, குறைப்பாடுகளை சரி செய்து, கொண்டு 19 ஐ நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
மாத்தளை கிரான்ட் மவுண்ட் ஹோட்டலில் இன்று (04) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனிக் கட்சி ஒன்றினால், மீண்டும் அரசை அமைக்க இயலாது. இதனால், திருடர்கள், ஊழல்வாதிகள் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விரிவாக தேசிய கொள்கையை உருவாக்கி, புதிய பயணத்திற்கு தலைமை தாங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதேச சபை முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து இடங்களிலும் திருடர்கள் இருக்கின்றனர். பிரதேச சபைகளில் மணல் அனுமதிப்பத்திரம் மூலம் தரகு பணம் பெறுகின்றனர்.
இதேவேளை கோட்டாபய அரசாங்கம் சுசில் பிரேமஜயந்தவுக்கு, கிரிக்கெட் போட்டியில் போன்று ஒரு பந்தில் 6 ஓட்டங்களை எடுத்தது போல் செய்துள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.
#SrilankaNews