அக்கரைப்பற்று – பனங்காடு பாலத்துக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வீதியின் அருகே இருந்த தூணுடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளனர். பனங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment