முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் கீழிருந்த பொறுப்புக்கள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின், இராஜாங்க அமைச்சின் கீழிருந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகிய பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக்கள், முன்னுரிமை, குறித்த நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றை நிதியமைச்சின் கீழ் கொண்டுவரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Leave a comment