ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!
மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்து மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் – என்றார்.
இது தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் ஆளுநராக பெரும்பாலும் நான் பெறுப்பேற்க உள்ளேன். நாடு தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியை சிறப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே இராஜாங்க அமைச்சர் பதவியை அர்ப்பணிப்பு செய்து மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளேன்.
இதேவேளை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படுமென ஊடகவியலாளர் எழுப்பியக் கேள்விக்கு “அது கட்சி தீர்மானிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a comment