27 19
இலங்கைசெய்திகள்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

Share

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

சிஎஸ்சி என்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval), தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்

இரண்டு நாள் பயணமாக அவர் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

இந்தியா, மொரீசியஸ், மாலைதீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிஎஸ்சி இன் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது சொந்த மூலோபாயக் கவலைகளை கருத்திற்கொண்டு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாநாட்டை கையாள்கிறது.

இந்தநிலையில், இந்த மாநாட்டில், தற்போதைய பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதறான உத்திகள் பற்றி விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ;ந்தியாவின் தோவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...