681b5337 f1bb 49ee 909d fbd9f9179f28
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

Share

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் தி.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஊடகர் அமரர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர், “ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட்டு, அவர்கள் தமது ஊடகப் பணியைத் தங்கு தடையின்றி மேற்கொள்ள அரசு வழிசமைக்க வேண்டும். அத்தோடு ஊடகர் ஐயாத்துரை நடேசன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...

world 59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீவு முழுவதும் 2,000 அதிகாரிகள் களத்தில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...