நாடாளுமன்றில்
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் செலவுகளைக் குறைக்க ஆலோசனை!

Share

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிதண்ணீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனையைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னாலுள்ள நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொறிமுறை மின்சாரப் பாவனையைக் குறைக்கும் முகமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் நீர் நிலையிலிருந்து நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்காக நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் பாவிக்கப்பட்டன இதை நிறுத்துவதால் 75 மெகா வோட் மின்சாரம் சேமிக்கப்படுகின்றது எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் சி.எப்.எல். மின்குமிழ்களுக்குப் பதிலாக எல்.ஈ.டி. மின்குமிழ்கள் பாவிக்கப்படுகின்றன எனவும் பொறியியலாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...