நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான யோசனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெற்றது.
இதன்போது 48 மணிநேரத்துக்கு நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அனுமதி கோரியுள்ளார். இதற்கு கட்சி தலைவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
எனினும், சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் அனைத்து நாடாளுமன்ற குழுக்களும் செயலிழக்கும். அதன் பின்னர் புதிதாகவே நியமனம் இடம்பெறும்.
இவ்விடயம் உட்பட நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும்போது இடம்பெறும் கொள்கை விளக்க உரை என்பவற்றை கருத்தியே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment