கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை
கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
நேற்றைய தினம் (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த கொரோனா சூழலில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களில் எண்ணிக்கையும் குறைவாகவுள்ளது , அவ்வகையில் குறித்த மாகாணங்களில் செயலாற்றிக்கொண்டிருக்கும் சுகாதார துறை சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனைப்போன்றே பேசப்படாத பிரிவினராகக் காணப்படும் கிராம சேவகர்கள் தொடர்பாகவும் பேசவேண்டும், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்படுவதைப் போலவே கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் – என தெரிவித்துள்ளார்.
Leave a comment