இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான இந்தியாவின் அதானி குழுமம், மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அதானி நிறுவனம் இரண்டாவது காற்றாலை மின் திட்டத்தை பூநகரி பிரதேசத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மைக் குழுவுக்கு BOI பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் BOI ஆல் வரையப்படும் என்றும், BOI நிலையான எரிசக்தி ஆணையகத்தின் (SEA) தலைவர், திறைசேரி செயலாளர் மற்றும் CEB தலைவர் ஆகியோரால் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவின் மூலம், அதானி குழுமம் மன்னாரில் 1,000 மெகாவாட் காற்றாலை ஆற்றல் திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் எவ்வாறாயினும், இத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து தமக்கு தெரியாது என இ.மி.ச தலைவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வடக்கில் மூன்று தீவுகளில் சினோ சோர் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கலப்பின ஆற்றல் அமைப்பு திட்டத்தை இடைநிறுத்த சீனா முடிவு செய்துள்ளதாக சீன தூதரகம் கடந்த வியாழக்கிழமை (2) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment