3 1 9
இலங்கைசெய்திகள்

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

Share

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

தெழுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மீண்டும் காவல்துறையில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் அண்மையில் உயிரிழந்தார்.

அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, இவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை சென்ற நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன் அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் நான் எந்தத் துறையையும் மற்றும் அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும் மற்றும் அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவ்வாறான சூகூழ்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று (25) காலை 11 மணிக்கு முன்னிலையாகுமாறு சிக்கடாபள்ளி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அல்லு அர்ஜுனிடம் 20 இற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவம் நடந்த அன்று ரசிகர்களை தள்ளி விட்டமைதான் கூட்ட நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தியா தியேட்டருக்கு அழைத்து சென்று அன்று நடந்ததை மீண்டும் செய்து காட்ட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...