செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
செஸ் வரி மாற்றத்தால் பாடசாலை உபகரணங்களின் விலை உயர்வு குறித்து, சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment