பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!
பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
மேலும், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவற்றை நிவர்த்திசெய்யும் முகமாக முதற்கட்டமாக வலய பாடசாலைகளை இணைத்து ,கல்வி மத்திய நிலையம் ஒன்றில் இணைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை ஆயிரம் பாடசாலை இணைய இணைப்பு என்ற எண்ணிக்கையில் முன்நகர்த்த தீமானித்துள்ளோம்.
மாணவர்களின் பாடசாலை நூல்களை இணையத்தில் குரல்வழி பாடமாக பதிவேற்றி செய்மதி தொழில் ஊடாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அதிவேக இணைய வசதியுடன் கூடிய கற்றல் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கல்வி அலைவரிசை ஊடாக,நேரசூசி அடிப்படையில் தொலைக்காட்சியில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கல்வி நடவடிக்கை சென்றடையும் வாய்ப்பை உருவாக்குவோம் – எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment