தலைமைகளில் அதிரடி மாற்றம்: கசிந்த செய்தி!!

cope

அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான (கோப்) குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு ஆகியன உட்பட 5 முக்கிய குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம் வரவுள்ளன என்று அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளதால் மேற்படி குழுக்களும் கலைந்துள்ளன.

எனவே, புதிதாக நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது, மேற்படி குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவர்களிலிருந்து ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்படும்.

கடந்த முறை கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை ஆளுங்கட்சியினரே வகித்தனர். இம்முறை சரித்த ஹேரத் மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் மாற்றப்படலாம் என அறியமுடிகின்றது.

#SrilankaNews

Exit mobile version