கட்சியின் முடிவைமீறி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகியோர் ஏற்கனவே நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவன்ன, சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோர் நீக்கப்படவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment