மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சந்திப் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பேசாலை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த கூலர் ரக வாகனம், வைத்திய சாலை சுற்றுவட்டப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கடைகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தில் வைத்தியசாலை பகுதியில் இயங்கி வந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும், சில கடைகளும் சேதமடைந்துள்ளன.
விபத்தில் கூலர் வாகனச் சாரதி மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#SrilankaNews