கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் டுபாய் நோக்கி தப்பிச் சென்றிருந்த நிலையில், நேற்று (12) இரவு அந்நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கார் ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதி இடம்பெற்ற விபத்தின் பிரதான சந்தேகநபராவார்.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்திருந்தார்.
விபத்தின் போது, அந்த காரின் பின்னால் பயணித்த பெண் ஒருவரை மூன்று பெண்கள் கொடூரமாக தாக்கியிருந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் இரண்டு பெண்களை கைது செய்தனர்.
#SriLankaNews