ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்!!

Share

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு ஆனந்தா ஆனந்தா கல்கல்லூரியின் 135வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (29) முற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020-2021 ஆண்டுகளில் திறமை செலுத்திய மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

பசுமை ஹைட்ரஜன் என்பது எதிர்காலக் கப்பல்களை இயக்கும் முக்கிய வலுசக்தி . எம்மிடம் பச்சை எமோனியா உள்ளது. அதற்காக திருகோணமலையை பிரதான துறைமுகமாக மாற்ற வேண்டும். இவற்றின் ஊடாக , வலுசக்தியை மிகுதியான நாடாக மாறும்.

அதிலிருந்து நாம் கார்பன் கிரடிட்டை பெறலாம். ஏனைய நாடுகள் எங்களிடம் இருந்து கார்பன் கிரெடிட்களை வாங்கும். இயற்கையை வளர்க்கும் போது அதற்காக எமக்குப் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு நம் கடனைக் குறைக்கலாம். நம் கையில் பாரிய சக்தி இருக்கிறது. அவற்றை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். இன்று, மாலைதீவு சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் கடற்கரைகள் உள்ளன. மலைநாடு, எங்களுக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் உள்ளது.

பௌத்த மற்றும் இந்து மத ஸ்தலங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அண்டை நாடான இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அதில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பேரை கொண்டுவந்தாலும் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்தியா இன்று வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா முன்னேருவதற்கு சில மூலப் பொருட்கள் இல்லை. உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் துறைமுகத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே கொழும்பை பாரிய துறைமுகமாக மாற்ற வேண்டும். புதிய தெற்கு துறைமுகத்தைப் போன்றே வடக்கு துறைமுகமும் உருவாக்கப்பட்டது.

கடல்சார் பொருளாதாரத்தை நாம் உருவாக்க முடியும். இதுவரை எந்த ஒரு நாடும் இதனை செய்யவில்லை.

எங்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். நம்மிடம் தகவல் தொழில்நுட்பம் இருக்கிறது.இதில் முக்கிய அங்கம் செயற்கை நுண்ணறிவை பெறுவது. குறிப்பாக நம்மிடம் உள்ள பிரிவு அது. எதிர்காலத்தில், நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு செல்ல வேண்டும். மற்ற நாடுகளை விட முன்னேறும் நாடாக மாற்ற வேண்டும். அத்தகைய நாட்டைக் கட்டியெழுப்ப புதிய தலைவர்கள் தேவை. எங்களால் வழிகாட்ட மட்டுமே முடியும்.

யார் தலைமை ஏற்க வேண்டும்? இளைஞர்களாகிய நீங்கள் தான் தலைமைத்துவத்தை பெற வேண்டும். 77 ஆம் ஆண்டில் ஜே.ஆர் கூட அது உங்கள் எதிர்காலம் என்று தான் கூறினார். அதனால் நல்லது கெட்டது இரண்டும் வளர்க்கப்பட்டது.

இப்போது எனக்கும் உங்கள் எதிர்காலம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த சவாலை ஏற்க முடியுமா? நமது எண்ணங்களின்படி சமுதாயத்தை மாற்றுவது பயனற்றது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் உள்ளனர்.

அந்த சமூகத்திற்கு செல்லுங்கள். எல்லாவற்றினதும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பாடசாலையிலுள்ள திறமையானவரகள் முன்னேறிச் செல்வார்கள். சவால்களை இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம்.

சவால்களை ஏற்றுக்கொண்டால் தோற்றுவிடுவோம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சவால்களை யோசிக்காமல் ஏற்றுக்கொண்டால் முன்னேறிச் செல்ல முடியும்.

19ஆம் நூற்றாண்டில் நவீன இலங்கையை உருவாக்க ஆனந்தா முன்னோடியாக செயற்பட்டது. எனவே 20 ஆம் நூற்றாண்டில் முன்னோடியாக செயற்படுங்கள். இந்த மாற்றங்களை ஒரு வருடத்தில் செய்ய முடியாது. பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் ஆகலாம்.

இது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. இன்னும் 25 ஆண்டுகளில் உங்கள் வயது எவ்வளவு? இங்குள்ள யாரும் 50 வயதுக்கு மேல் வயதாகியிருக்க மாட்டீர்கள். 45 முதல் 55 வயது வரை இருக்கும். எனவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

குடியரசு உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடக்கும் முன்பே சீனா வளர்ந்த நாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. குறிப்பாக அந்த ஆண்டுக்கு 2048 என்று பெயரிட்டோம்.நூற்றாண்டு விழாவுக்கு முன் நவீன இந்தியா உருவாகும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

அதாவது 2047ஆம் ஆண்டில். ஏன் நம்மால் முடியாது? அந்த சவாலை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுங்கள்.நீங்களும் நாமும் அதனை செய்யலாம்” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...