வாடிக்கையாளர்களால் கையளிக்கப்படும் பயன்படுத்தப்பட்டு நிறைவடைந்த அல்லது குறைபாடுகளையுடைய கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நுகர்வார் விவகார அதிகார சபையின் தலைவர் லிற்றோ மற்றும் லாப் கேஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட எஞ்சிய எரிவாயு சிலிண்டர்களின் அளவு தற்போதைய சந்தை விலையில் கணக்கிடப்பட்டு புதிய எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது அந்த பெறுமதி கழிக்கப்பட வேண்டும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுத்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மாவட்ட அதிகாரிகளுக்கோ அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment