law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் துஸ்பிரயோகம் – 80 வயது போதகருக்கு வலை வீச்சு!!

Share

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் போது , ‘தாம் தவறு இழைத்தால் பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் மண்ணை நிரப்பி அதனால் அடிப்பார்கள் என சிறுவர்கள் தெரிவித்துள்னர். அத்துடன் தாம் இல்லத்தில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் பலரிடம் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது எமது இல்ல போதகரிடம் நாம் கூறியவற்றை கூறி விடுவார்கள். அதனால் நாம் ஆசிரியர்களிடம் முறையிட்டமைக்காக மீண்டும் இல்லத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம்’ என சிறுவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்

அதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த 80 வயதான தலைமை போதகர் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியத்துடன், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தலைமை போதகரை பொலிஸார் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த போது அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...