அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு

VideoCapture 20221015 114557

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று(15) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version