யாழில் அப்துல் கலாம் மணற்சிற்பம்!

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணற்சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது.

அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய துணைத் தூதரால் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

IMG 20221015 WA0025

#SriLankaNews

Exit mobile version