4
இலங்கைசெய்திகள்

நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழப்பு.

Share

3பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை, வெதகொடலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் , சுமார் 45 நாட்களுக்கு முன்னர்இ நள்ளிரவில், குடிசைக்குள் புகுந்த நரி, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கால்களின் குதிகால் பகுதியைக் கடித்து சென்றுள்ளது. எனினும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வைத்தியர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவருக்கு வெறிநோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவரது இரு மகன்களும் அவரை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, பேருவளை வளதர வெதகொட பிரதேசத்தில் நரி, நாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் வளர்ப்பு நாய்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.

#srilankanews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....