மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 07 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
செப். 12ஆம் திகதி திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி, சபையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment