இந்திய மண்ணில் சாதனை படைத்த இலங்கை தமிழர்
வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்க உள்ளார்.
இவர் தனது பயணத்தை நேற்று (23.07.2023) சென்னை மாநகரின் மெரீனா கடற்கரையில் ஆரம்பித்துள்ளார்.
நடை பயணத்தின் நோக்கம்
“மரங்கள் எங்கள் உயிர். மரம் வளர்ப்போம். இயற்கையை காப்போம்” எனும் பதாதையை சைக்கிளில் தாங்கிய வண்ணம் தனது இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த பயணத்தில் தமிழ் நாட்டின் 38 மாவட்டங்களூடாக பிரதாபன் பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			         
 
			        
Leave a comment