ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி வீழ்ந்து மரணம்

125598 murdered

ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர் தவறுதலாக வழுக்கி விழ்ந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 52 வயதுடைய சண்முகலிங்கம் கேசவநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆலயத்திற்குச் சென்ற குறித்த அடியவர் ஆலயத்தில் கால்கழுவும் இடத்திற்குச் சென்ற வேளையிலேயே கால் வழுக்கி கீழே வீழ்ந்துள்ளார்.

தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

#Srilankanews

Exit mobile version