கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 340 லீற்றர் (2 பரல்)கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது கொடுத்த நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியினரால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment