இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.பல்கலை மாணவிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் – பொலிஸில் முறைப்பாடு!

University of Jaffna 1
Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வராதவாறு தடுத்தாலும் (ப்ளக்) வேறு இலக்கங்களில் இருந்து அழைப்பெடுத்து மாணவிகளை இம்சைக்கு உள்ளாக்கி உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவிகளால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்த போதிலும் , நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவிகள், தமக்கு தொலைபேசியில் தொல்லை தரும் மர்ம நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டில் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தினையும் மாணவிகள் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட்...

1 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல...

2 20
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட அறிவிப்பு

Local Government Election Sri Lanka Announcement   2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து...

8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...