500x300 1723264 delhi1 e1656910404646 1
இலங்கைசெய்திகள்

நாய் குரைத்ததால் உரிமையாளாரை இரும்புக்கம்பியால் தாக்கிய நபர்!

Share

இந்தியா – டெல்லி பஸ்சிம் விகார் பகுதியில் பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் குரைத்ததால் கோபமடைந்த நபர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறித்த பகுதியைச் சேர்ந்த ராக்சித் என்பவரின் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து குரைத்துள்ளது. நாய் குரைத்ததால் பயந்துபோன அந்த நபர், கோபத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளரான ராக்சித்திடம் வந்து வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, நாயின் உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில் ராக்சித் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அத்துடன் தன்னைப் பார்த்து குரைத்த நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை. இரும்பு கம்பியால் நாயையும் அடித்துள்ளார். அடிபட்ட நாய் சுருண்டு விழுந்துள்ளது.

இதுதொடர்பாக ராக்சித் கொடுத்த புகாரின் அடிப்படையில், பஸ்சிம் விகார் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....