azath ali
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி!

Share

நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிந்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளை கடந்து வந்தவர். அரசியலில் எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும், ஒருநாளும் அவர் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்ததில்லை.

முக்கியமான காலகட்டத்தில் பல தியாகங்கள் செய்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு. மட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில்கூட துணிந்து நின்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது முன்னுதாரணம், அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது.

வாதத்திறமையும், வாக்குறுதி மீறாத நேர்மையும்தான் அவரை இந்தளவு உயர்த்தியிருக்கிறது.

சர்வதேசத்தில் அவருக்குள்ள செல்வாக்கினால் நமது நாட்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வியூகங்களை வகுப்பார் என்ற நம்பிக்கை எனக்குமட்டுமல்ல, பாராளுமன்றத்துக்கும் உள்ளது. இந்த நம்பிக்கைதான் அவரை இன்றைய வாக்கெடுப்பில் வெ்றியீட்ட வைத்துள்ளது.

வென்றகையோடு சகல கட்சிகளையும் ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதி அழைத்திருப்பது ஜனநாயகவாதிக்குள்ள பண்பையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இனியாவது அரசியல் பேதங்களை மறந்து, நமது நாட்டு நெருக்கடியை தீர்க்க சகலரும் புதிய ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...