கிராம உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன்பொல பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றிய,தெற்கு கிராம உத்தியோகத்தர் எஸ்.எம். கபில பிரியந்த என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இன்று இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கிராம உத்தியோகத்தரை, காரில் பயணித்த சிலர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரின் இலக்கத்தகடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Leave a comment