மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டில் அனைத்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment