IMG 20230521 WA0006
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இலவசக் கல்வி கருத்தரங்கு!

Share
தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு ஆரம்பமானது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச் சந்தியிலுள்ள மகா கணபதி மண்டபத்தில் கருத்தரங்கு ஆரம்பமானது.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு குறித்த இலவசக் கல்வி கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
கருத்தரங்கில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு கொழும்பு பிரபல பாடசாலைகளின் வினாத்தாளுடன் கூடிய கையேடுகள் மற்றும் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குத் தேவையான எழுதுகருவிப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வ.பார்த்தீபன், கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜாவின் குடும்பத்தினர், அனுசரணையாளர்கள், வளவாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கொண்டதாக அமைந்த இக்கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (22) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள DCM கல்வி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
IMG 20230521 WA0021 IMG 20230521 WA0005 IMG 20230521 WA0018
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...